T Nagar
அருள்நம்பி Arulnambi #நீதிக்கட்சி #தியாகராயநகர் திராவிட இயக்கத்தின் தொட்டிலான நீதிக்கட்சி உருவாக்கிய தியாகராயநகரைச் சுற்றி வருவதன் மூலம் அவ்வியக்கத்தினைப் பற்றியும் முன்னோடிகளைப் பற்றியும் அறிவோம். 1920களில் நீண்ட ஏரியாக இருந்தப் பகுதியை ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி குடியிருப்பாக மேம்படுத்தியது + பனகல் பூங்காவின் மேற்குப்புறத்திலிருந்து நம் கற்பனைப் பயணத்தைத் துவக்குவோம். இந்த சாலை சுமந்து நிற்கும் பெயர்க்குச் சொந்தக்காரர் - டாக்டர்.உஸ்மான். தஞ்சையைச் சேர்ந்த யுனானி மருத்துவர்; அரசு செயற்கவுன்சிலின் உறுப்பினர்; ஆங்கிலேயர் மட்டுமே வகித்திருந்த "கவர்னர்"-ஆக இருந்தவர் அண்மையிலிருக்கும் பூங்கா வாயிலிற் சென்று பனகலரசரின் சிலை முன் நிற்கிறோம். 1920 தேர்தலில் வென்று இவர் முதல்வராகி செய்தவை - முதல் Communal G O கொண்டுவருதல் (Reservation) - மருத்துவம் படிக்க வடமொழித் தகுதி விலக்கல் - மதத்தலைவர்களைக் கலந்தாலோசித்து இந்து அறநிலையத்துறை ஏற்படுத்தல் இதோ, பூங்காவின் வெளியே அதன் கிழக்குச்சுவரின் மையத்தினின்று பார்க்கிறோம்; வடகிழக்கு (GN Chetty Rd), கிழக்கு (Pondy bazaar), தென்கிழக்கி...